அரசியலுக்கு போனாலும், விஜயை விடாமல் துரத்தும் அஜீத்குமார்..வெளியான ஷாக்கிங் தகவல்..

By Sumathi

Updated on:

நடிகர் விஜய், நடிகர் அஜீத்குமாரிடையே பனிப்போர் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. இருவரும் நண்பர்களாக வெளியில் தெரிந்துக்கொண்டாலும் மறைமுகமாக இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்து வருவதாகவே தெரிகிறது. ஏனெனில் இருவருமே சம காலத்தில் சினிமாவுக்குள் வந்தவர்கள்.

Ajith Kumar

   

தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் டைரக்டர் என்ற அடையாளத்துடன் விஜய் வந்தாலும், ஒரு கட்டத்துக்கு பிறகு தனது கடும் உழைப்பாலும் திறமையாலும்தான் விஜய் கிடுகிடு என முன்னுக்கு வந்தார். முன்னணி நடிகரில் ஒருவராக மாறினார். சமீப காலமாக ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக, அதிகமாக வசூலை குவிக்கும் படங்களில் நடிக்கும் உச்ச நடிகராக விஜய் பெரிய இடத்தை அடைந்திருக்கிறார்.

Vijay

அதே போல் யாருடைய ஆதரவும் இல்லாமல், எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்தவர் அஜீத்குமார். அவரும் தனது கடுமையான உழைப்பாலும், நடிப்பு திறமையாலும் முன்னிலைக்கு வந்த ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் இன்று டாப் ஸ்டாராக இருக்கிறார்.

இன்றைய சூழலில் ரஜினி. கமல், விஜய், அஜீத் இவர்கள் நான்கு பேரும் தான் நான்கு டாப் ஸ்டார்களாக உச்சத்தில் இருக்கின்றனர். இவர்கள் மட்டுமே நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்குகின்றனர். தொடர்ந்து அவர்கள் நடித்த படங்கள் மட்டுமே வசூலில், பல நூறு கோடிகளை தொடர்ந்து குவித்து வருகிறது.

Ajith Kumar

இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கான தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் மற்றொரு தகவல் வெளிவந்து இருக்கிறது. அதாவது நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சியை துவங்க இருக்கிறார். அதனால் அவரது கட்சியின் பெயரை அறிவிக்க இருக்கிறார்.

அவர் கட்சி பெயரை அந்த நாளில், தனது படம் குறித்த அப்டேட் வர வேண்டும் என ஆசைப்படும் அஜீத், விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அந்த நாளில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. சினிமாவில்தான் இருவரும் போட்டி என்றால், அரசியலுக்கு சென்ற பிறகும், விஜயுடன் போட்டியை அஜீத் தொடர்கிறாரே, அவரை விடாமல் துரத்துகிறாரே என ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

author avatar
Sumathi