தமிழக சட்டசபை தேர்தல் 2026 இல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் களம் தற்போதையிலிருந்து சூடு பிடிக்க விட்டது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, TVK உட்பட பல கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் நான்கு முனை போட்டி தமிழகத்தில் நிலவ உள்ளது. அதாவது திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக பாஜக கூட்டணியில் ஒரு அணி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கிறது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டா( தேசிய துணை தலைவர்) இணை பொறுப்பாளர் முரளிதர் மொஹெல் (மத்திய இணை மந்திரி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
