FLASHNEWS: வீடுகளுக்கு புதிய கேஸ் சிலிண்டர் கிடையாது…. திடீர் அறிவிப்பு…. காலையிலேயே ஷாக் நியூஸ்…!

By Nanthini on சித்திரை 28, 2026

Spread the love

வீடுகளுக்கான புதிய எரிவாயு இணைப்புகளை வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. கூடுதல் சிலிண்டர்களைப் பெறுவதற்காகச் சிலர் மாற்று நபர்களின் ஆதார் அடையாளங்களைப் பயன்படுத்தி முறைகேடாகப் புதிய இணைப்புகளைப் பெறுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய முறைகேடுகளைக் களைந்து விநியோகத்தை முறைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்றும், சிலிண்டர் விநியோகம் மற்றும் சரிபார்ப்புப் பணிகள் சீரடைந்தவுடன் தகுதியுள்ளவர்களுக்கு மீண்டும் புதிய இணைப்புகள் தடையின்றி வழங்கப்படும் என்றும் பெட்ரோலிய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.