சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இப்போது பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு ரவுடி அண்ட் கோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடி படமாக இது உருவாகி உள்ளது.
ஒரு கார்பரேட் நிறுவனத்தில் ரவுடிகளை பணியில் அமர்த்தி வேலை செய்ய சொல்கின்றனர். அங்கு பணியில் சேர போலீஸ் ஸ்டேஷனில் எப்ஐஆர் இருந்தால்தான் முடியும் என்ற வித்யாசமான காமெடி களத்தில் ரவுடி அண்ட் கோ படம் உருவாகி உள்ளது. இப்படி ஒரு வித்யாசமான கதைக்களத்தில் எடுத்த இந்த படத்தின் 3 நிமிட பிரமோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் விழுந்து விழுந்து சிரிக்கும் காமெடி காட்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
