இன்றைய காலகட்டத்தில் யுபிஐ மூலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகமாக நடைபெறுகிறது. இந்தியாவின் தேசிய பரிவர்த்தனை கழகம் யுபிஐ சேவையை மேலாண்மை செய்கின்றது. தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், கடன் கட்டணம் ஆகியவற்றை மாதம் தோறும் செலுத்துவதற்கு ஆட்டோ பே என்ற வசதி உள்ளது. பீம் UPI, google pay, போன் பே போன்ற பல செயலிகளில் இருக்கும் ஆட்டோ பே வசதியை ஒரே இடத்தில் மேலாண்மை செய்யும் வசதியை NPCI கொண்டுவந்துள்ளது.
இதற்காக புதிதாக ஒரு தளத்தையும் உருவாக்கியுள்ளது. அதன்படி upihelp.npci.org.in என்ற ஒரே தளத்தில் அனைத்து யுபிஐ செயலிகளில் இருக்கக்கூடிய ஆட்டோ பே வசதியை பார்வையிட்டு மேலாண்மை செய்ய முடியும். இந்த புதிய வசதி வருகின்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
