ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மடிக்கக்கூடிய ‘ஐபோன் டுயோ’ மாடலில் இடம்பெற்றுள்ள ‘டூயோ பிரிவியூ’ என்ற கேமரா அம்சம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகக் காதலிகள் அல்லது மனைவிகளுக்குப் போட்டோ எடுக்கும்போது, கோணம் சரியில்லை, லைட்டிங் சரியில்லை என்று ஆண்கள் திட்டு வாங்குவது வழக்கம். ஆனால், இந்த புதிய ஐபோன் டுயோ போனில் முதன்மை கேமரா மூலம் போட்டோ எடுக்கும்போதே, 5.4 இன்ச் வெளிப்பக்கத் திரையில் போட்டோ எப்படி வருகிறது என்பதைப் படம் பிடித்துக் கொள்ளப்படும் நபர் நேரலையாகப் பார்த்துத் திருத்தங்களைச் செய்ய முடியும்.
இந்த வசதியை நெட்டிசன்கள் மற்றும் காதலர்கள் “எங்களுக்குக் கிடைத்த ஆகப்பெரிய வெற்றி, இனி பல ரிலேஷன்ஷிப் காப்பாற்றப்படும்” எனக் கூறி வைரலாக்கி வருகின்றனர். ஐபோன் 18 புரோ மற்றும் புரோ மேக்ஸ் மாடல்களுடன் அறிமுகமாகியுள்ள இந்த மடிக்கக்கூடிய ஐபோன் டுயோ போனின் தொடக்க விலை இந்தியாவில் ரூ.2,99,900 ஆகும்.
