தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹3,000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், இத்திட்டம் குறித்த கடைசி நேர அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்வர் தொடங்கி வைத்த உடனேயே, மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பரிசு விநியோகம் உடனடியாகத் தொடங்கப்படும். விநியோகத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் நாளை எனக் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
