உலகளாவிய சந்தையின் நிலவரப்படி தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வேறுபட்டு வருகிறது. சென்னையின் தங்க விலை செப்டம்பர் மாத தொடக்கத்தில் உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 78,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி சிறிது சரிவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மீண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆபரண தங்க விலை உயர தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 6, 2025 (இன்று) நிலவரிப்படி, 1 கிராம் தங்கத்தின் விலை ரூ. 140 உயர்ந்து ரூ. 10,005க்கு விற்பனை ஆகிறது. மேலும் 1 சவரன் தங்கம் ரூ. 1,120 உயர்வடைந்து, ரூ. 80,400 விற்பனையாகிறது.
