ரத்த உறிஞ்சியான அட்டைகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் பல விஷயங்களை கண்டுபிடித்துள்ளனர். ஒரு பிராணியின் ரத்தத்தை உறிஞ்சும் போது அட்டை பல என்சைம்களை அதன் வாயிலிருந்து சுரக்கிறது. அதில் ஒன்று ஹீரோயின் ஹிருதின். ரத்தத்தில் கிளாட்டுகள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்கனவே இருக்கும் கிளாட்டுகளை உடைக்கவும் உதவுகிறது. அட்டை வாயிலிருந்து சுரக்கும் ஒரு ரசாயன திரவம் கடிபட்ட இடம் மரத்துப்போக செய்கிறது.
இந்த திரவத்தை லோக்கல் அனஸ்தேசியவாகவும் பயன்படுத்துகின்றனர். மேலும் அட்டை சுரக்கும் வசோடிலேட்டர்ஸ் என்ற பொருள் ரத்த குழாய்களை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்திற்கு ஊக்கமளிப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அட்டை வாயிலிருந்து சுரக்கும் என்சைம்களை பயங்கரமான முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தி வலியை குறைக்கின்றனர்.
சொரியாசிஸ் எக்சிமா போன்ற சரும நோயை அட்டையின் உமிழ் நீரில் உள்ள என்சைம்களை உபயோகப்படுத்தி குணப்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஒற்றைத் தலைவலி, நீரிழிவு, வயிற்றில் உண்டாகும் பல வித அல்சர்கள் ஆகியவற்றை குணப்படுத்த அட்டை சுரக்கும் என்சைகளை உபயோகிக்க ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
