விஜய் அலையில் சிக்கிய ரஜினி டயலாக்…? ‘காலம் சொன்ன பதில்’ இதுதானா…? பஞ்ச் வசனத்தை வைலராக்கும் நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on வைகாசி 4, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கும், ரஜினிகாந்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது, “காலம் பதில் சொல்லும்” என ரஜினி குறிப்பிட்டிருந்தார். தற்போது தவெக வேட்பாளர்கள் பல இடங்களில் முன்னிலை வகிப்பதைக் கண்டு, ரஜினியின் அரசியல் குரல் இந்தத் தேர்தலில் எடுபடவில்லை என ஒரு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், அவரது ரசிகர்கள் இதனை மறுத்து சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

குறிப்பாக வில்லிவாக்கம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் தவெகவின் கை ஓங்கியிருப்பது, இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்களின் ஆதரவை அக் கட்சி பெற்றுள்ளதைக் காட்டுகிறது. ஆரம்பத்தில் விஜய்யின் அரசியல் வருகையைக் குறைத்து மதிப்பிட்டவர்கள் கூட, தற்போதைய தேர்தல் நிலவரத்தைக் கண்டு வியப்படைந்துள்ளனர். இந்தத் தேர்தல் முடிவுகள் ரஜினிகாந்தின் கருத்துகளுக்குக் காலம் கொடுத்த பதிலாக அமையுமா அல்லது தமிழக அரசியலில் ஒரு நிரந்தர மாற்றத்தை உருவாக்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.