“செலக்டிவ் அம்னீஷியா வந்திருச்சா?”…. சத்யராஜின் பேச்சால் கிடுகிடுத்துப் போன இணையதளம்… நெட்டிசன்கள் வைத்த அல்டிமேட் ஆப்பு….!

By Nanthini on ஆடி 20, 2026

Spread the love

சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மூத்த நடிகர் சத்யராஜ், தற்போதைய அரசியல் சூழல் குறித்து தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. ஆட்சி மாற்றம் மற்றும் தற்போதைய அமைச்சரவை குறித்து குறிப்பிட்ட அவர், “இப்போது இருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் மா. சுப்பிரமணியன் தான் எப்பவும் அமைச்சர்” என்று கூறியிருந்தார். நடைமுறை அரசியலுக்கு முரணாக அமைந்த இந்த பேச்சு, வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தள பயனாளர்களின் பார்வையை ஈர்த்து, மீம்ஸ் கிரியேட்டர்களுக்குப் பெரிய தீனியாக மாறியுள்ளது.

சத்யராஜின் இந்த கருத்தைக் கிண்டல் செய்யும் விதமாக நெட்டிசன்கள் பல நகைச்சுவையான பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இப்போதும் ஸ்டாலின் தான் முதல்வர், உதயநிதி தான் துணை முதல்வர், எனக்கு இப்போது இருக்கும் பிரதமரைத் தெரியாது, மன்மோகன் சிங் தான் பிரதமர்! பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தான் நம்புவேன்” என்றெல்லாம் கலாய்த்து மீம்ஸ்களைப் பறக்கவிட்டு வருகின்றனர். மேலும், “கடந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சத்யராஜ் ‘செலக்டிவ் அம்னீஷியா’ (தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி நோய்) என்ற பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் போல, அரசியல் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் பழைய நினைவுகளிலேயே மூழ்கியிருக்கிறார்” என்று விமர்சித்து வரும் நெட்டிசன்களின் கமெண்ட்டுகள் தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகின்றன.