சென்னையில் பருவமழைக்கு பிறகு கொசுக்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் அடிக்கப்படும் கொசுமருந்து புகை போதிய பலன் அளிக்கவில்லை என்றும், இதனால் காய்ச்சல் பாதிப்புகள் கூடிவருவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தற்போது மழைநீர் வடிகால்வாய்களின் ஓட்டைகளை கொசுவலை கொண்டு மூடும் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாகத் தொடங்கியுள்ள இப்பணிகள் மூலம், வடிகாலுக்குள் இருக்கும் கொசுக்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இருப்பினும், மாநகராட்சியின் இந்த வினோத நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது. வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் மிதக்கவிட்ட பழைய சம்பவத்துடன் ஒப்பிட்டு, பலரும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர் வடிவேலுவின் கொசுவலை காமெடியைப் பதிவிட்டு ‘சிட்டி விஞ்ஞானி’ என அதிகாரிகளை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், எந்த முறையிலாவது கொசுத்தொல்லைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைத்தால் போதும் என்பதே சென்னைவாசிகளின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…