“சும்மா விடமாட்டேன், சட்ட நடவடிக்கை பாயும்…” எச்சரித்த தேவரா ஹீரோ… பதிலுக்கு விமர்சித்த நெட்டிசன்கள்… அதிர்ச்சியில் திரையுலகினர்…!!

By Devi Ramu on ஐப்பசி 4, 2026

Spread the love

ஆந்திரத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான ‘தேவரா’ படத்தின் “சுட்டமல்லி” பாடலை, சிலர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக மோசமான முறையில் நிர்வாணமாகச் சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி வீடியோவைக் கண்டு ஆத்திரமடைந்த ஜூனியர் என்டிஆர், “பெண்களைத் தாயாக மதிக்க வேண்டும்; இதுபோன்ற வக்கிரச் செயல்களில் ஈடுபட்டவர்களையும், அதை இணையத்தில் பகிர்ந்தவர்களையும் சட்டம் மூலம் கடுமையாகத் தண்டிப்பேன்” என எச்சரித்து பதிவிட்டார். ஆனால், அவரது பதிவின் கீழே திரண்ட ஏராளமான நெட்டிசன்கள், “படத்திலேயே ஜான்வி கபூரை ‘சாஃப்ட் பார்ன்’ நடிகை போலக் கவர்ச்சியாக நடிக்க வைத்ததே நீங்கள் தான், இப்போது நியாயம் பேசுவதா?” எனக் கடுமையாகவிமர்சித்து வருகின்றனர்.

   

சமீபகாலமாக சாய் பல்லவி, ஜான்வி கபூர் போன்ற முன்னணி நடிகைகளின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றிப் பணம் சம்பாதிக்கும் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. அதேவேளையில், ஜான்வி கபூரின் வளர்ச்சியைத் தடுக்க பாலிவுட்டில் சில பிரமுகர்கள் பிஆர் மூலம் இதுபோன்ற சதிவேலைகளைச் செய்கிறார்களா என்ற கோணத்திலும் கேள்விகள் எழுந்துள்ளன. ஏஐ தொழில்நுட்பம் மனித நலனுக்குப் பயன்படாமல் ஆபாசத்திற்குப் பயன்படுவது குறித்துப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.