“அரசியல் மேடையில் வீர வசனம்.. சொந்த வாழ்க்கையில்…?” மனைவியை அழ வைத்துவிட்டு மகளிர் நலத்திட்டங்களா…? விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on பங்குனி 7, 2026

Spread the love

நடிகர் விஜய் தொடங்கிய தவெக கட்சி, மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான பிரத்யேகத் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட உள்ளது. ஒருபுறம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து அவர் வாக்குறுதிகளை முன்வைக்கத் தயாராகும் அதே வேளையில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாழ்வில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகப் பேசும் ஒரு தலைவர், தனது சொந்தக் குடும்பத்தில் மனைவிக்குத் தேவையான மன நிம்மதியையும் பாதுகாப்பையும் வழங்கத் தவறிவிட்டாரா என்ற விமர்சனம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொதுவாழ்வு என இரண்டிலும் முரண்பட்ட பிம்பத்துடன் விஜய் செயல்படுவது அவரது அரசியல் பயணத்திற்குப் பின்னடைவாக அமையலாம் என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

   

மனைவியின் கண்ணீரை அலட்சியப்படுத்திவிட்டு, பெண்களைக் கவர தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவது முதிர்ச்சியற்ற செயல் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. ஒரு தலைவர் தனது குடும்பத்தில் நீதியை நிலைநாட்டத் தவறும்போது, நாட்டிலுள்ள பெண்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிக்க முடியும் என்ற கேள்வியே இப்போது பலரின் மனதிலும் எழுந்துள்ளது.