வியாழக்கிழமை நடைபெற்ற ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred 2026) தொடருக்கான ஏலத்தில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், இந்தப் பாகிஸ்தான் வீரரை சுமார் 2.34 கோடி ரூபாய்க்கு (£190,000) ஏலம் எடுத்துள்ளார். மற்ற இந்திய உரிமையாளர்கள் எவரும் பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்யாத நிலையில், காவ்யா மாறன் எடுத்த இந்த முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
🚨 Kavya Maran's franchise Sunrisers Leeds acquired Pakistan spinner Abrar Ahmed for £190k.
Abrar was literally used to mock India with the having tea picture and used to mock Indian players with unwanted celebrations in Asia Cup.
Shame on you SRH 🤦
pic.twitter.com/U0xvq072Eo— Tejash (@Tejashyyyyy) March 12, 2026
அப்ரார் அகமதுவை ஒப்பந்தம் செய்ததற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணம், அவர் கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராகச் செய்த சர்ச்சைக்குரிய பதிவுகள் ஆகும். ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, இந்திய ராணுவத்தைக் கேலி செய்யும் வகையில் “தேநீர் சைகை” (Tea Gesture) காட்டும் வீடியோவை அவர் பகிர்ந்து இந்தியாவை ட்ரோல் செய்திருந்தார். மேலும், 2025 ஆசியக் கோப்பைப் போட்டியின் போது இந்திய வீரர்களை அவமதிக்கும் வகையில் தேவையற்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இத்தகைய பின்னணி கொண்ட ஒரு வீரருக்குக் கோடி கணக்கில் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்திருப்பதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
🚨 ABRAR AHMED WIN BATTLE BETWEEN INDIA vs PAKISTAN 🚨
Sunrise Leeds purchased Abrar Ahmed for £190,000 in The Hundred league
Indian Owner Kavya Maran picked Abrar Ahmed in hundred league while other owners didn't pick any Pakistani players 🥲🤯
— Kiara (@crickiara) March 12, 2026
சமூக வலைதளங்களில் காவ்யா மாறனை இலக்கு வைத்து ரசிகர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். “இந்தியாவைப் பகிரங்கமாக அவமதித்த ஒரு வீரருக்கு SRH உரிமையாளர் முக்கியத்துவம் கொடுப்பது வெட்கக்கேடானது” என்றும், “புத்திசாலித்தனம் இல்லாத செயல்” என்றும் இணையவாசிகள் சாடி வருகின்றனர். மேலும் மற்றொருவர், “மூளை இல்லாத அழகுக்கு காவ்யா மாறன் சரியான உதாரணம்” என்றார். மற்றொரு பயனர், “இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான போரில் அப்ரார் அகமது வெற்றி பெற்றார் சன்ரைஸ் லீட்ஸ் அணி, தி ஹண்ட்ரட் லீக்கில் அப்ரார் அகமதுவை £190,000க்கு வாங்கியது. இந்திய உரிமையாளர் காவ்யா மாறன், ஹண்ட்ரட் லீக்கில் அப்ரார் அகமதுவைத் தேர்ந்தெடுத்தார், மற்ற உரிமையாளர்கள் எந்த பாகிஸ்தானிய வீரர்களையும் தேர்வு செய்யவில்லை” என்றார். மற்ற அணிகள் பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணித்த நிலையில், காவ்யா மாறன் மட்டும் அப்ராரைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்வியுடன் #BoycottSRH போன்ற ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டாகி வருகின்றன.
