அய்யோ இந்த படமா..? வேணவே வேணாம்.. விஜயின் GOAT படத்தை வாங்க மறுத்த NETFLIX நிறுவனம்.. வெளியான ஷாக்கிங் தகவல்..

By Sumathi on ஜனவரி 29, 2024

Spread the love

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் படம் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். சென்னை, ஐதராபாத், துருக்கி உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் அடுத்து ராஜஸ்தான், இலங்கை என படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

   

இதில் பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது. குறிப்பாக விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதால் அப்பா கேரக்டருக்கு சிநேகாவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் நாயகிகளாக நடிக்கின்றனர். இதில் பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன், சுதீப், கஞ்சா கருப்பு, பிரேம்ஜி, வைபவ், அஜ்மல், ரம்யா கிருஷ்ணன், கனிகா என பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

   

 

இந்த படத்தை பொருத்தவரை ஏற்கனவே, ஜூன் 13ம் தேதி ரிலீஸ் செய்வது என திட்டமிட்டு விட்டனர். அதனால், படப்பிடிப்பு பணிகளை வரும் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 69 படம் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆளாளுக்கு சில தகவல்களை சொன்னாலும் அது விஜய் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இல்லை. அவர் அரசியலில் ஈடுபட இருப்பதால், இந்த படத்துடன் தற்காலிகமாக நடிப்பை ஒத்தி வைக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே கோட் படத்தை டிஜிட்டல் உரிமம் பெற, பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ்சை நாடியுள்ளனர். ஆனால் கோட் படம் எங்களுக்கு வேண்டாம் என நெட்பிளிக்ஸ் புறக்கணித்து விட்டது. அதற்கு காரணம் ஏற்கனவே, சவுத் இந்தியா என பிரித்து ரூ. 125 கோடிக்கு விற்பனை செய்துவிட்டனர். 2024 ஆண்டுக்கான படங்கள் அனைத்தும் வாங்கி விட்டோம் என கூறிவிட்டனர். இதற்கு முக்கிய காரணம்.

இவர்கள் சொன்ன அதிக விலைதான். அதே போல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திடம் பேச்சு நடத்திய போது, அந்த விலை தங்களுக்கு கட்டுப்படியாகாது என மறுத்துவிட்டனர். இந்த படத்தை அத்தனை கோடி கொடுத்து வாங்குவதற்கு பல படங்களை வாங்கி விடலாம் என்பது அவர்களது கணக்கு. இப்போதைக்கு பெரிய படங்களை வாங்குவது அமேசான் தான். எனவே, அடுத்தக்கட்டமாக அமேசானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம். முடிவு என்னவென்று இதுவரை தெரியவில்லை.