திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏ வான வி.ஜி.ராஜேந்திரனின் உதவியாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளருமான VS நேதாஜி திமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதாவது சாலை அமைப்பது உள்ளிட்ட அரசு ஒப்பந்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில், VS நேதாஜியை கட்சியிலிருந்து நீக்கி துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
