தென்னிந்திய நடிகைகளின் சொத்து மதிப்பு இவ்வளவா?.. முதலிடத்தில் எந்த நடிகை தெரியுமா?.. வெளியான டாப் 5 லிஸ்ட்..!!

By Nanthini on ஆவணி 3, 2023

Spread the love

உலக அளவில் ஹாலிவுட்டிற்கு அடுத்தபடியாக இந்திய திரைப்பட தயாரிப்பு மிகப்பெரிய தொழில் துறையாக விளங்கி வருகிறது. திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் பெயரும் புகழும் வளர நட்சத்திரங்களின் வாழ்க்கையும் அப்படியே மாறிவிடுகிறது. அதாவது ஆரம்பத்தில் குறைந்த சம்பளத்திற்கு நடிக்க தொடங்கிய நடிகர் நடிகைகள் பலரும் இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணியில் நடிகர்களாக உள்ளனர்.

   

தற்போது நடிகர்களுக்கு நிகராக நடிகைகளும் அதிக அளவு சம்பளம் வாங்கி வருகிறார்கள். தற்போது ஜவான் திரைப்படத்திற்காக மட்டும் நயன்தாரா 11 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனை தாண்டி சமந்தா மற்றும் ராஷ்மிகா உள்ளிட்ட நடிகைகளும் தற்போது ஹீரோக்களுக்கு நிகராக படங்களில் நடித்து சம்பளம் அதிகம் வாங்கி வருகின்றனர்.

   

 

இந்நிலையில் சினிமாவை தாண்டி சில தொழில்கள் செய்தும் சம்பாதிக்கும் நடிகைகளின் சொத்து விவரங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் டாப் 5 நடிகைகளின் சொத்து விவரப்பட்டியல் இதோ.

  1. நயன்தாரா- ரூ. 165 கோடி
  2. தமன்னா- ரூ. 110 கோடி
  3. அனுஷ்கா- ரூ. 100 கோடி
  4. சமந்தா- ரூ. 89 கோடி
  5. பூஜா ஹெக்டே- ரூ. 50 கோடி