தோளுக்கு மேல் வளர்ந்த சிம்ரனின் மகன்கள்.. வெளியான லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!!

By Nanthini on ஆவணி 3, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல் மற்றும் விக்ரம் போன்ற பல ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன். 90 ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவருக்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தனது சிறுவயது நண்பரான தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

திருமணத்திற்கு பின்னர் சினிமா பக்கம் தலை திருப்பாத இவர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மாதவன் நடிப்பில் உருவான “ராக்கெட்டரி நம்பி விளைவு” என்ற திரைப்படத்தில் மாஸ் என்று கொடுத்துள்ளார் சிம்ரன். இவருக்கு தற்போது 47 வயது. இருந்தாலும் 47 வயதிலும் தனது இளமையை அப்படியே வைத்துள்ளார் சிம்ரன்.

   

 

இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக சிம்ரன் களமிறங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தனது கணவருடன் சேர்ந்து சென்னையில் சொந்தமாக ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் தனது கணவர் மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சென்ற போது புகைப்படம் எடுத்த நிலையில் அதே இடத்திற்கு தனது குடும்பத்துடன் தற்போது சென்று இரண்டு புகைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Simran Rishi Bagga இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@simranrishibagga)