நெப்போலியன் வீட்டுக்கு வர போகும் மகாலட்சுமி இவங்க தானா..? வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோ..!!

By admin on ஆடி 13, 2024

Spread the love

பிரபல நடிகரான நெப்போலியன் கடந்த 1991-ஆம் ஆண்டு ரிலீசான புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் வில்லனாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடித்தார். சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட கிராமத்து திரைப்படங்களில் நெப்போலியன் நடிப்பு மிரட்டலாக இருக்கும்.

வீடியோ காலில் நடந்து முடிந்த நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் நிச்சயம்!! மருமகள் யார் தெரியுமா.. - விடுப்பு.கொம்

   

சினிமாவை தாண்டி அரசியலிலும் நெப்போலியனுக்கு ஈடுபாடு அதிகம். திமுக சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் கடந்த 2001-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவி வகித்தார். அதன் பிறகு பெரம்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக மாறினார். இப்போது நெப்போலியன் அமெரிக்காவிற்கு சென்று செட்டில் ஆகி விட்டார்.

   

நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்.. வருங்கால மருமகள் யார் தெரியுமா

 

அவரது மகன் தனுஷ் தீவிர தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார். தனது மகனுக்கு சிறந்த மருத்துவமும் நல்ல மனநிலையும் இருக்க வேண்டும் என்பதற்காக நெப்போலியன் அமெரிக்காவிற்கு சென்று விட்டார். அவரது இரண்டு மகன்களும் நெப்போலியணின் ஐடி தொழிலை கவனித்து வருகின்றனர். 27 வயதாகும் தனது மூத்த மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க நெப்போலியன் முடிவு செய்தார்.

நெப்போலியன் மருமகளை பார்த்தீங்களா?.. திருநெல்வேலி டூ அமெரிக்கா.. வீடியோ காலில் நிச்சயம் - Latest Tamil News - Tamil News Today - குமுதம் நியூஸ் - தமிழ்ச் ...

விரைவில் ஜப்பானில் வைத்து திருமணமும் சென்னையில் வைத்து ரிசப்ஷனும் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் நெப்போலியன் மகன் தனுஷுக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் வீடியோ காலில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.