“‘அவ உனக்கு அம்மா மாதிரிடா…” சித்தியுடன் உல்லாசமாக இருந்த அண்ணன் மகன்… நேரில் கண்ட சித்தப்பாவை கொன்ற கொடூரம்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 28, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலத்தில் தனது சித்தியுடன் தகாத உறவில் இருந்த 19 வயது வாலிபர், தங்களைப் பார்க்கக்கூடாத முறையில் நேரில் பார்த்துவிட்ட சித்தப்பாவைக் கொடூரமான முறையில் கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டம் சௌதுப்பல் பகுதியைச் சேர்ந்த விவசாயி தான்னய்யா (36). இவரது மனைவி சாரதாவுக்கும், தான்னய்யாவின் அண்ணன் மகனான சிவா (19) என்பவருக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய தகாத உறவு ஏற்பட்டுள்ளது. “அவள் உனக்கு தாய் போன்றவள்” எனத் தான்னய்யா கண்டித்தும் இருவரும் கேட்காமல் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

   

இந்நிலையில், கடந்த அக்டோபர் 23 அன்று விவசாய நிலத்திலிருந்த கிணற்றின் அருகே சாரதாவும் சிவாவும் உல்லாசமாக இருந்தபோது, அங்கு வந்த தான்னய்யா அவர்களைக் கையும் களவுமாகப் பார்த்து ஆத்திரமடைந்துள்ளார். அப்போது மனைவி சாரதா கணவனின் கால்களைப் பிடித்துக்கொள்ள, சிவா அங்கிருந்த கல்லில் தான்னய்யாவின் தலையை மோதி சம்பவ இடத்திலேயே கொடூரமாகக் கொன்றுவிட்டுத் தப்பியோடினான். மாயமாகிவிட்டார் என நாடகமாடிய மனைவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மைகள் வெளிவரவே, சாரதா மற்றும் கள்ளக்காதலன் சிவாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.