பகீர்… வீட்டில் தனியாக இருந்த பெரியம்மா… அரிவாளால் வெட்டி சாய்த்த தங்கை மகன்… 4 சவரன் நகைக்காக நடந்த… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!

By Swetha on ஐப்பசி 30, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கந்தன் காலனி பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இவரது கணவர் கேரளாவில் கூலி வேலை செய்து வரும் நிலையில், சசிகலாவின் கழுத்தில் இருந்த தாலிச் செயின் மற்றும் செல்போன் ஆகியவை திருடப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையிலான காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நகைக்காக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர்.

   

விசாரணையின் முடிவில், சசிகலாவின் தங்கை மகனான விக்னேஷ் (எ) முனீஸ் என்பவரே இந்த கொலையைச் செய்தது உறுதியானது. தலைமறைவாக இருந்த அவரைப் பிடித்த காவல்துறையினர், அவரிடமிருந்த 4 பவுன் தங்கச் செயின் மற்றும் செல்போனைக் பறிமுதல் செய்து கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.