திருட வந்ததாக நினைத்து இளம் பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஆவணி 3, 2025

Spread the love

நேபாள நாட்டின் போஹாரா மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் சுஷ்மிதா சரு மஹர் என்பவர் வேலை தேடி இந்தியாவிற்கு வந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று இரவு ஒரு மணி அளவில் செல்போனில் வந்த அழைப்பை தொடர்ந்து வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற அவர் அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த சிலர் சுஷ்மிதாவை திருட வந்த பெண் என்று நினைத்து அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அந்த கும்பல் மிரட்டும் வகையில் கூச்சலிட்டு சுஷ்மிதாவை பிடிக்க முயற்சி செய்தனர். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அந்த கும்பல் சுஷ்மிதாவை கொடூரமாக தாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கட்டை உள்ளிட்டு ஆயுதங்களால் கடுமையாக தாக்கிய நிலையில் காயமடைந்த சுஷ்மிதா தான் திருடவில்லை இங்கு வாடகைக்கு வசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இருந்தாலும் சமாதானம் ஆகாது அந்த கும்பல் அவரை தொடர்ந்து தாக்கிய நிலையில் உடனே தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சுஷ்மிதாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்தப் பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்தனர். அந்தப் பெண்ணை கும்பலாக சேர்ந்து அப்பகுதியினர் தாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.