திடுக்கிடும் திருப்பம்…. நேபாளத்தில் நொடியில் நடந்த பேராபத்து…. 200 பலி, 300 இந்தியர்களின் நிலை என்ன?… செயற்கைக்கோள் தந்த பகீர் தகவல்…!

By Nanthini on ஆவணி 27, 2026

Spread the love

வடக்கு நேபாளத்தில் பனிச்சரிவு காரணமாக ஆற்றில் திடீரென ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு, அப்பகுதியை நிலைகுலையச் செய்துள்ளது. குறுகிய நேரத்திற்குள் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆற்றின் கரைகளில் ஒதுங்கும் உடல்களை மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திடீர் இயற்கை பேரிடரில் நேபாளத்திற்குச் சென்ற நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர். காணாமல் போன 400-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரில் 300 பேர் இந்தியர்கள் என்றும், அதில் தமிழகத்தைச் சேர்ந்த 40 பேரும் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது. மாயமானவர்களை விரைந்து கண்டறியவும் மீட்புப் பணிகளை வேகப்படுத்தவும் மீட்புக் படையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

   

வெள்ளப்பெருக்கிற்கான முதன்மைச் சாத்தியக்கூறாக லெண்டே ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு சுட்டிக்காட்டப்படுகிறது. பனிச்சரிவு காரணமாக போதே கோசி ஆற்றின் நீர் ஓட்டம் தற்காலிகமாகத் தடைபட்டு, பின்னர் ஒரே நேரத்தில் அணைக்கட்டு உடைந்ததைப் போல் சீறிப் பாய்ந்ததே இந்த பேரழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

   

மேலும், திபெத் பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் பனி அல்லது பாறைச் சரிவைத் தூண்டியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதேபோல பனிப்பாறை ஏரி உடைந்ததால் (GLOF) நீர் பெருகியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் வெள்ளத்தின் உண்மையான மூலகாரணத்தைக் கண்டறியும் முயற்சியில் நேபாள அரசு ஈடுபட்டுள்ள நிலையில், முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.