26,000 அடி உயரத்தில் பேரழிவு…. நிமிஷத்தில் கரைந்த ஊர்கள்… 160 உடல்கள் மீட்பு…. 750 பேர் மாயம்…. அதிகாலையிலேயே பேரதிர்ச்சி….!

By Nanthini on ஆவணி 27, 2026

Spread the love

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் பனிப்பாறைகள் உருகி ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால், அங்கிருந்து பெருக்கெடுத்து வந்த நீர் நேபாளத்தின் கோஷி ஆற்றில் கலந்து கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. 26,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் உள்ள ஏரி உடைந்ததால் கட்டுக்கடங்காமல் சீறிப் பாய்ந்த வெள்ள நீர், நேபாளத்தின் ரசுவா மற்றும் டாடிங் மாவட்டங்களில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பாலங்கள், சாலைகள் மற்றும் வீடுகளை அடித்துச் சென்று பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. இந்த கோர பேரழிவில் திபெத்தில் 3 பேரும், நேபாளத்தில் 157 பேரும் என மொத்தம் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வெள்ளப் பெருக்கில் 133 இந்தியர்கள் உட்பட சுமார் 750 பேர் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போன இந்தியர்களில் சுற்றுலா சென்ற 57 தமிழர்களும் அடங்குவர். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நேபாள ராணுவம் 15-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ள போதிலும், மீட்புப் பணியில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் மாயமாகியுள்ளதால் அப்பகுதியில் பெரும் சோகமும் பரபரப்பும் நிலவி வருகிறது.