ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க…. திடீரென உருவான செயற்கை ஏரி உடைந்த நொடி… 2000 பேர் மாயம்… நேபாளத்தை உலுக்கிய கோரத் தாண்டவம்….!

By Nanthini on ஆவணி 29, 2026

Spread the love

சீனா – திபெத் எல்லைப் பகுதியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு காரணமாக அப்பகுதியில் இயற்கை முறையில் ஒரு செயற்கை ஏரி உருவானது. அந்த ஏரியின் கரை உடைந்து, சீறிப்பாய்ந்த பெருவெள்ளம் நேபாளத்தின் நதிகளில் கலந்ததால் நாடு முழுவதும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கில் சுமார் நான்கு கிராமங்கள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டு உருக்குலைந்துள்ளன. இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 2,000க்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இந்தியர்களும் அடங்குவர். குறிப்பாக, அங்குச் சென்றிருந்த 100க்கும் மேற்பட்ட தமிழர்களில் 50 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 50 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

துயரச் சம்பவம் நடந்த தொடக்கத்திலேயே இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மீட்புப் பணிகளுக்கு உதவ முன்வந்தன. இருப்பினும், “தங்களிடமே தேவையான திறமையான மீட்புப் படைகள் உள்ளன” எனக் கூறி நேபாள அரசு ஆரம்பத்தில் சர்வதேச உதவிகளை ஏற்க மறுத்தது. ஆனால், நிலமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும், சேதத்தின் அளவைக் கணக்கிட்டும் தற்போது நேபாள அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. பிற நாடுகளின் அதிநவீன மீட்புக் குழுக்கள் களமிறங்க ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு மீட்புப் பணிகள் புதிய வேகமெடுத்துள்ளன.

   

இதனைத் தொடர்ந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் சுரங்க மீட்பு நடவடிக்கைகள், உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கான டி.என்.ஏ பரிசோதனைகள் மற்றும் தடயவியல் ஆய்வுகளை விரைவுபடுத்த இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் நிபுணர் குழுக்கள் நேபாளத்திற்கு விரைந்துள்ளன. காணாமல் போன தமிழர்கள் உள்ளிட்ட அனைவரையும் விரைவாக மீட்க சர்வதேசப் படைகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.