நெல்லை கே.டி.சி. நகரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் என்பவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தான் காதலித்த பெண்ணைப் பார்ப்பதற்காக வந்த கவினை, அந்தப் பெண்ணின் சகோதரனான சுர்ஜித் என்பவர் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இந்த ஆணவக்கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாளையங்கோட்டை போலீசாரால் சுர்ஜித் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக இந்த விசாரணை சிபிசிஐடி (CBCID) வசம் ஒப்படைக்கப்பட்டது. தொடர் விசாரணையில், இந்த கொடூரக் கொலைக்கு சுர்ஜித்தின் பெற்றோரும், தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் சார்பு ஆய்வாளர்களுமான (SI) சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் உடந்தையாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரும் காவல்துறையினரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், கொலைக்குத் துணை நின்றதாக சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் அவரது உறவினர் ஜெயபால் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த சுர்ஜித்தின் தாயாரும், பெண் எஸ்.ஐ-யுமான கிருஷ்ணகுமாரி கடந்த 10 மாதங்களாகக் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சிபிசிஐடி போலீசார் இன்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமாரி, போலீஸ் வாகனத்தில் ஏறும் போது அழுதுகொண்டே சென்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
கவின் கொலை வழக்கில் சுர்ஜித், தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைதான நிலையில், தற்போது 10 மாதங்களுக்குப் பிறகு முக்கியக் குற்றவாளியான தாய் கிருஷ்ணகுமாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான கிருஷ்ணகுமாரியை நெல்லை 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிசிஐடி போலீசார், அவரிடம் இந்த ஆணவக்கொலை குறித்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…