MGR- க்கு நேரு எழுதிய கடிதம்… கோபப்பட்ட காமராஜர்…

By admin on ஆவணி 8, 2024

Spread the love

ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார் இவரை பண்டிட் நேரு என்றும் அழைப்பர். குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர் என்பதால் எனது பிறந்த நாள் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று 15 ஆகஸ்ட் 1947 இல் இருந்து 27 மே 1964 வரை பிரதமராக பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு. இந்திய சுதந்திர இயக்கியத்தின் முன்னோடியான நேரு காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்று முதல் இன்று வரை அவருக்கு அடுத்ததாக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி என அக்கட்சி தொடர்ந்து வருகிறது.

   

   

எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் காமராசர். 1954 முதல் 1963 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றியவர். குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தையும், இலவச கல்வியையும் பல பள்ளிகளையும் தன் காலகட்டத்தில் கட்டியவர் காமராஜர்.

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர் எம்ஜிஆர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர். தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திராவிட கட்சியில் இணைந்து மக்களுக்காக பணியாற்றியவர்.

திராவிட கட்சியில் இணைந்து பணியாற்றினாலும் காமராஜர் மீது மரியாதையும் அன்பும் வைத்திருந்தவர் எம்ஜிஆர். அப்போது காமராஜர் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், 1962 ஆம் ஆண்டு இந்தியா சீனா போர் மூண்டது. யுத்தத்திற்காக அப்போதைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு நிதியை திரட்ட அறிவிப்பு செய்தார். இந்த செய்தியை கேள்விப்பட்ட எம் ஜி ஆர் அவர்கள் தன் சார்பாக 75 ஆயிரம் ரூபாயை யுத்த நிதிக்காக கொடுப்பதாக தெரிவித்தார்.

அதன் முதல் தவணையாக 25 ஆயிரம் ரூபாயை காமராஜர் அவர்களை நேரில் சென்று பார்த்து கொடுப்பதற்காக தலைமையகம் சென்ற எம்ஜிஆர். அங்கு காமராஜர் வெளியூர் செல்ல இருக்கிறதாகவும் ரயில் நிலையத்தில் இந்நேரம் இருப்பார் என்று அங்கிருந்தவர் கூறியவுடன், உடனே காத்திருக்காமல் எம்ஜிஆர் நேரே ரயில் நிலையத்துக்கு சென்று காமராஜர் அவர்களிடம் யுத்த நிதிக்கான பணத்தை கொடுத்தார்.

#image_title

இதை அறிந்த பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு எம்ஜிஆர் அவர்களுக்கு தன் கைப்படவே நன்றி கடிதத்தை எழுதி அனுப்பினார். இந்த செய்தியை பரப்பிய நாளிதழ்களின் பத்திரிகையாளர் ஒருவர் காமராஜரிடம் வந்து எம்ஜிஆர் இதையெல்லாம் விளம்பரத்திற்காக மட்டுமே தான் செய்திருக்கிறார் என்று கூற, அவரிடம் பயங்கரமாக கோபப்பட்ட காமராஜர் ஏன் எம்ஜிஆர் தரலைன்னா நீங்க தர போறீங்களா? உதவி செய்யறவங்களை எப்பவுமே நம்ம அவமானப்படுத்தக் கூடாது என்று அந்த நிருபரை திட்டி அனுப்பியுள்ளார் காமராஜர்.