நீயா நானா என்றால் அது கோபிநாத் தான். அவரின் நேர்மையான பேச்சும், பெண்களுக்கு அவர் அளிக்கும் மறியாதையும், அவரின் தெளிவான சிந்தனையும் அவரை எங்கோ உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது. சிறுவயதில் பெற்றோருடன் நீயா நானா பார்க்காதவர்கள் கூட வளர்ந்த பிறகு இப்போது இவரின் நீயா நானாவை ஞாயிறு தோறும் பார்த்து ரசிக்கிறார்கள்.

Gobinath talks about his ideologies
வீட்டில் ஒருவர் கோபிநாத் போல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஏராளம். இவரின் பேச்சு குழந்தைகளுக்கும் பாடம், டீன் பருவத்தில் இருப்பவர்களும் பாடம், பெற்றோர், வயதானோருக்கும் பாடம். யார் மனம் பாதிக்காத படி இவரின் பேச்சு இருக்கும், அதேசமயம் அது சரியாக இருக்கும். ஆனால் நானே சில சமயங்களில் தவறாக பேசியிருக்கேன் என கோபிநாத் தற்போது கூறியுள்ளார்.

Gobinath regrets this forever
அவர் கூறியுள்ளதாவது, நான் சரியாக தான் பேசுகிறேன் என நினைத்துள்ளேன், ஆனால் பல நேரங்களில் நானே தவறாக தான் பேசி உள்ளேன். அதை இப்போது தான் உணர்கிறேன் என அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல வயதாக வயதாக தான் கோபம் நிறைய வருகிறது, அதை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறேன் என அவர் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

25 years of gobinath
கிட்டத்தட்ட கோபிநாத் மீடியாவை, நுழைந்து 25 வருடங்கள் ஆகிறது, இத்தனை வருடங்கள் மீடியாவில் ஒரு தொகுப்பாளரால் தாக்கு பிடிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் கோபிநாத் தான்.