ஒரே நேரத்தில் இரண்டு சீரியல் வாய்ப்பை இழந்த நீ நான் காதல் கதாநாயகன்.. கடைசில இப்படி ஆயிடுச்சே..!

By Nanthini on சித்திரை 20, 2025

Spread the love

தமிழ் சின்னத்திரையை பொருத்தவரையில் சீரியல்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுகிறது. நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஒரு சிறிய கதாபாத்திரங்களில் சீரியலில் கிடைக்கக்கூடிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விட்டால் ஒவ்வொரு கலைஞருக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும். அதில் எத்தனையோ கலைஞர் சின்னத்திரை மூலமாக இன்று சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். பலருக்கும் நல்ல எதிர்காலத்தை அமைத்து தரும் பிளாட்பார்ம் தான் சீரியல். அதனால் சீரியலை நம்பி தினம் தோறும் எத்தனையோ கலைஞர் புதிதாக வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி வந்தவர்களில் ஒருவர் நடிப்பின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

கெட்டி மேளம் சீரியல் பிப்ரவரி 25 எபிசோட்: கல்யாணத்தை நிறுத்த துடிக்கும்  கவின்.. அட்வைஸ் பண்ணிய லட்சுமி.. கெட்டி மேளம்

   

இதனால் அவருக்கு அடுத்தடுத்த இரண்டு சீரியல்களில் நடக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் தற்போது அந்த இரண்டு சீரியல்களிலும் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த நடிகர் வேறு யாருமில்லை ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை என்ற சீரியல் மூலம் அறிமுகமான சங்கரேஸ் குமார் என்பவர் தான். இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியலிலும் இரண்டாவது ஹீரோவாக ஆகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு ஜீ தமிழில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

   

உங்கள பார்த்தாலே கடுப்பாகுது முரளி..😡 | Nee Naan Kaadhal | Episode Preview  | 7th october 2024 - YouTube

 

அதன்படி ஜீ தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட கெட்டிமேளம் என்ற சீரியலில் அஞ்சலியை ஒரு தலைபட்சமாக காதலிப்பும் கவின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதில் இவருடைய கதாபாத்திரம் மக்களை கவர்ந்த நிலையில் திடீரென்று வந்த ப்ரோமோவில் இவருக்கு பதிலாக வேறொரு நடிகர் வந்துவிட்டார். இதன் மூலம் இவர் கெட்டி மேளம் தொடரில் இருந்து விலகியது உறுதியாகிவிட்டது. அதனைப் போலவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வருவதால் இதிலும் இவருடைய கதாபாத்திரத்தை அடுத்து பார்க்க முடியாது. இப்படி ஒரே நேரத்தில் இரண்டு சீரியலிலும் நடிக்க முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் இவருக்கு இனி வரும் புதிய சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.