தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் சூசகமாக தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் விஜய் தரப்பிலிருந்து கூட்டணி குறித்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணி நிலைபாடு குறித்து பேசி உள்ளார். விஜயின் தமிழக வெற்றிக்கலகம் கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்த கேள்விக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் விரிவுபடுத்தப்படும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவின் கருத்தையே தமது கருத்தாக தெரிவித்தார்.
திமுகவை தோற்கடிப்பதை எங்களுடைய ஒரே நோக்கம். கூட்டணியை விரிவுபடுத்துவது என்பது பலவீனத்தின் அறிகுறி கிடையாது. திமுகவை வீழ்த்த அனைத்து தரப்பினரின் பங்கும் அவசியம். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு பாஜக ஆதரவளிக்கும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து விட்டதாகவும் தமிழிசை குறிப்பிட்டார். வரவிருக்கும் 2026 தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விரிவடையும் என்ற நம்பிக்கையை அவர் திட்டவட்டமாக மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார். இதனால் கிட்டத்தட்ட தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா குறித்த…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் சென்னை தலைமைச் செயலகத்தில்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை குறைத்து மதிப்பிட வேண்டாம் என தாம் ஏற்கனவே கூறியிருந்ததை கிரிஷ் சோடங்கர் மீண்டும்…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பேட்டி…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் 'விஜய் அலை' வீசி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சியைப்…