“சைரன் வச்ச காரு.. சட்டசபைக்கு 20 பேரு”… கேப்டன் பாணியில் பிரேமலதா போட்ட கண்டிஷன்…. ஆடிப்போன அமித்ஷா டீம்…..!

By Nanthini on தை 21, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை பெரும் இழுபறியை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்வைத்துள்ள அதிரடியான நிபந்தனைகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்பி பதவி மற்றும் பாஜக மேலிடத்தின் மூலம் மத்திய அமைச்சர் பதவி ஆகியவற்றை அவர் பிரதான கோரிக்கைகளாக வைத்துள்ளதாகத் தெரிகிறது.

தேமுதிகவின் இந்தக் கோரிக்கைகளால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மேலிடம் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதிமுக தரப்பில் 10 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்தாலும், மத்திய அமைச்சர் பதவி என்பது தங்களது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என அவர்கள் கைவிரித்துள்ளனர். இதையடுத்து, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசியபோது, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற புதிய டிமாண்ட் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

   

தற்போதுள்ள அரசியல் சூழலில் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும் தேமுதிகவிடம் கணிசமான வாக்கு வங்கி இருப்பதாக பாஜக கருதுவதால், அக்கட்சியைத் தக்கவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், “முதலில் கூட்டணியில் இணையுங்கள், வெற்றிக்குப் பிறகு பதவிகள் குறித்துப் பேசலாம்” என்ற பியூஷ் கோயலின் சமரசத்தை ஏற்க பிரேமலதா மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த அதிகாரப் போட்டியால், தமிழகத்தின் எதிர்க்கட்சிக் கூட்டணியில் தேமுதிக இணையுமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.