பீகார் தேர்தலில் NDA வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார். முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளதாக கூறிய அவர் தேர்தலுக்குப் பிறகு அவர்களுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என கூறினார். ஆனால் தற்போதைக்கு நிதிஷ்குமார் தலைமையில் தான் தேர்தலை சந்திக்கிறோம் என தெரிவித்துள்ளார். இதனால் பீகாரில் நீண்ட கால முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தேர்வாக மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
