திருச்சியில், தவெக தொண்டர்களின் வெள்ளத்தில் விஜய் தனது தேர்தல் பரப்புரையை நேற்று தொடங்கினார். திருச்சி ஏர்போர்ட் வந்தடைந்த அவருக்கு, அங்கு முதல் மரக்கடை MGR சிலை வரை தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 9 கி.மீ தூரத்தை 5 மணி நேரமாக கடந்து வந்த விஜய், திரளான தொண்டர்களுக்கு மத்தியில் 2026 தேர்தலுக்காக தனது பரப்புரையை மேற்கொண்டார். திருச்சியில் முடித்துவிட்டு அரியலூர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதற்கிடையில் சமீபகாலமாகவே சீமான் விஜய்யை சீண்டுவதையே வழக்கமாக வைத்து வருகிறார். சமீபத்தில் கூட அணில் குஞ்சுகள் என்று சொல்லி பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது திருச்சி பிரசாரத்தில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை விட அஜித், ரஜினி, நயன்தாராவுக்கு அதிக கூட்டம் வரும் என தெரிவித்துள்ளார். திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும.நான் சிறுவயதில் இருந்தபோது MGR, சிவாஜியை பார்க்க நின்ற தருணங்கள் உண்டு என்றும் கூறியுள்ளார்.
