தமிழ்நாட்டில் மாபெரும் இயக்குனராக வளம் வந்து கொண்டிருக்கும் அட்லி அவர்கள் இந்திய அளவில் ஒரு பிரம்மாண்ட படம் “ஜவான்” படைப்பை படைத்தார். அப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நயன்தாரா ஹீரோயினாக விஜய் சேதுபதி வில்லனாக மற்றும் பல யோகி பாபு, வி.டி.வி கணேஷ் போன்ற தமிழ் பிரபலங்கள் அப்படத்தில் நடித்த மிகப்பெரிய வெற்றியடைந்து இந்திய அளவில் பேசும் பொருளாக மாறியது அப்படம் தமிழக அளவில் பிரமாண்ட இயக்குனராக இருந்த அட்லி அவர்கள் தற்போது இந்திய அளவில் மாபெரும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஜவான் படத்திற்காக சிறந்த நடிகர் அவார்டை ஷாருக்கான் பெற்றிருந்த நிலையில் தற்போது அப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா அவர்களுக்கு பெஸ்ட் ஃபீமேல் அவார்டு வழங்கப்பட்டுள்ளது. ஜவான் படத்தில் நர்மதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தன் முழு திறமையை வெளிக்காமித்ததற்காக நயன்தாரா அவர்களுக்கு மாபெரும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. அதில் தற்போது பாலிவுட்டில் பெஸ்ட் ஃபீமேல் ஆக்டர் என்று விருது வழங்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் வழங்கப்படும் விருது வழங்கும் விழா ஆன “டாடா சாகிப் பல்கே” என்ற சர்வதேச நிகழ்ச்சியில் நயன்தாரா அவர்களுக்கு பெஸ்ட் விமன் ஆக்டர் என்று விருது வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு விருதுக்கு பாலிவுட் நடிகைகள் அனைவரும் கவர்ச்சியாக தான் உடை அணிந்து வருவார்கள், ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் க்யூட் ஏஞ்சல் போல் மஞ்சள் நிற சேலையில் தேவதை போல் விருது வழங்கும் விழாவில் சென்றிருந்தார், அதை கண்ட பாலிவுட் துறையே அவரை பார்த்து அழகில் மயங்கி போனார்கள் என்று கூறலாம், இதுவரை பாலிவுட்டில் யாரும் செய்யாத ஒன்றை நயன்தாரா செய்து பாலிவுட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
This one at Dadasaheb Phalke International Film Festival Awards 2024 ???? Best Actor Female~ JAWAN ???? pic.twitter.com/LRPH5jbtFV
— Nayanthara✨ (@NayantharaU) February 20, 2024
