லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் விக்னேஷ் வேணும் காதலித்து வந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து நடித்த போது அவருக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் லிங்கில் வாழ்ந்தனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
அதன் பிறகு வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து உயிர், உலகம் என பெயர் வைத்தனர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் எல்ஐசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வசூல் சாதனை குவித்தது.
அவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்தாலும் வெளிநாட்டுக்கு மகன்கள் உடன் சுற்றுலா சென்று என்ஜாய் செய்கின்றனர். இந்நிலையில் இரண்டாவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விதமாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர்.
மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவை அலேக்காக தூக்கும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். மேலும் உன்னை திருமணம் செய்தது தான் எனது வாழ்க்கையில் சிறந்த விஷயமே எனது உயிர் உலகம் என கேப்ஷன் போட்டுள்ளார். வீடியோவும் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram