புதுதொழிலில் இறங்கிய நயன்தாரா… கணவர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு போட்ட பூஜை…

By Meena on செப்டம்பர் 18, 2024

Spread the love

கேரளாவை பூர்வீமாகக் கொண்ட நயன்தாரா பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். இவரது இயற்பெயர் டயானா ரியா குரியன் என்பதாகும். 2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் அறிமுகமான நயன்தாரா 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

   

2005 ஆம் ஆண்டு சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நயன்தாரா. தொடர்ந்து சிவகாசி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, சத்யம், வில்லு, ஆதவன், பாஸ் என்ற பாஸ்கரன் போன்று தொடர்ந்து வெற்றி படங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார் நயந்தாரா.

   

இது மட்டுமல்லாமல் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் போன்ற ஹீரோவே இல்லாத ஹீரோயின் முக்கியத்துவம் வாய்ந்த சப்ஜெக்ட்டில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார் நயன்தாரா. தனது அபாரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார் நயன்தாரா.

 

நயன்தாரா 2015 ஆம் ஆண்டு நாளும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றிய இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதே ஆண்டில் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் இரட்டை குழந்தைகளை பெற்று எடுத்தனர். தற்போது நடிப்பில் மட்டுமல்லாமல் பல பிசினஸ்களில் ஆர்வம் கொண்டு முதலீடு செய்து வருகிறார் நயன்தாரா.

இன்று நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புது தொழிலில் முதலீடு செய்துள்ளதை அறிவித்திருக்கிறார். அது என்னவென்றால் ‘டிக்கெட் 9’ எனும் கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனத்தில் தான் நடிகை நயன்தாரா பல கோடிகளை முதலீடு செய்துள்ளார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர்.