nayanthara refused to act with sasikumar
ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நயன்தாரா. தன்னுடைய இரண்டாவது படத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். அதைத்தொடர்ந்து விஜய், சிம்பு, தனுஷ், சூர்யா என பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் நயன்தாரா. ஹோம்லியான கேரக்டர்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிக அன்பை பெற்றார் நயன்தாரா.
Nayanthara in billa
ஆனால் ஒரு கட்டத்தில் அதிரடியாக கிளாமர் ரூட்டை எடுத்தார். அதிலும் அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தில் பிகினி உடையில் வந்து ஷாக் தந்தார். இவரின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. அந்த சமயத்தில் தான் நாடோடிகள் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்தது. ஏற்கனவே சுப்ரமணியபுரம் என்ற ஹிட் படத்தை சசிகுமார் கொடுத்ததால் நயன்தாராவும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார்.
Ananya and sasikumar in nadodigal
ஆனால், இங்கு தான் ட்விஸ்ட்டே, நயன்தாராவின் நெருங்கிய நண்பர்களான சில நடிகர்கள். நீ சசிகுமாருடன் நடிப்பது தவறான முடிவு, பில்லா மாதிரி படம் பண்ணிட்டு சசிகுமாருடன் நடித்தால் உங்கள் மார்க்கெட் போய்விடும் என கூறி நயன்தாராவை குழப்பி விட்டுள்ளார்கள். அதனால் அட்வான்ஸ் வாங்கியிருந்த நயன்தாரா, அதை திருப்பி கொடுத்துவிட்டு இதில் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.
Sasikumar and Nayanthara
சசிகுமார் மட்டுமல்ல நாடோடிகள் படக்குழுவே இதனால் அப்செட் ஆகி விட்டார்கள், இறுதியில் அனன்யா அந்தப்படத்தில் நடித்தார். பெரிய பெரிய நடிகர்களுடன் நடித்த நயன்தாரா இதுவரை சசிகுமாருடன் மட்டும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…