“உசுரே நீதானே”.. முத்த மழை பொழிந்து கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நயன்தாரா.. வெளியான அழகிய புகைப்படம்..!

By Nanthini on புரட்டாதி 18, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் என்றும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

   

இன்னும் சொல்லப்போனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் இவருக்கு உள்ளது. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த காதல் அப்படியே பாதியில் முடிந்து விடும் என்று பலர் கூறி வந்த நிலையில் அவர்களின் அன்பை நிரூபிக்கும் விதமாக திருமணம் செய்து கொண்டனர்.

   

 

தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் நயன்தாரா அடிக்கடி தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் அடிக்கடி தங்கள் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இன்று 39 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி முத்த மழை பொழிந்த புகைப்படங்களை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில், எனது எல்லாமும் ஆக இருக்கும் உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் உன் மீது வைத்துள்ள காதலை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. கடவுள் எப்போதும் உன் வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க ஆசீர்வதிப்பார் என்று நயன்தாரா பதிவிட்டுள்ளார்.