nayanthara

தயாரிப்பாளரிடம் டீல் பேசும் நயன்தாரா.. ரஜினிகாந்த் உடன் மல்லுக்கட்டி சாதித்த லேடி சூப்பர்ஸ்டார்..

By admin on மார்கழி 13, 2024

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரைப் பற்றிய சர்ச்சை பேச்சுகள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கும். அதேபோல் நேற்று ஒரு ஆங்கில மீடியாவுக்கு நயன்தாரா பேட்டி ஒன்றை கொடுத்து இருந்தார். இது வைரலானது.

   

அதற்கு காரணம் முதலாவதாக நயன்தாரா வலைப்பேச்சு சேனலை நடத்தி வரும் அந்தணன் பிஸ்மி சக்திவேல் ஆகியோரை நேரடியாக தாக்கி பேசி இருந்தார். அவர்கள் என்னை பற்றி பேசி தான் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று கூறினார். அதற்கு அவர்களும் தங்களது சேனலில் நெத்தியடி பதிலை கொடுத்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

   

அது என்னவென்றால் நேற்றைய நேர்காணலில் நயன்தாரா எனக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் நான் வைக்கவே இல்லை எனக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது தயாரிப்பாளர்கள் தான் அந்த பட்டத்தை வைத்தார்கள் நான் வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை என்ற வாசகத்தை கூறி இருப்பார். இது சம்பந்தமாக இன்று வலைப்பேச்சு சேனலில் ஒரு உண்மையை உடைத்து பேசி இருக்கிறார்கள்.

 

அவர்கள் கூறியது என்னவென்றால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் நயன்தாரா தனக்குத்தானே வைத்துக் கொண்டது தான். எந்த தயாரிப்பாளரும் அவருக்கு பட்டம் வைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் நான் கமிட் ஆகும் எந்த ஒரு படத்திலும் அக்ரீமெண்டில் கையெழுத்து போடும் போது அதில் எனக்கு டைட்டில் கார்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட வேண்டும் என்ற வாசகத்தை சேர்த்து தான் கையெழுத்திடுவார் நயன்தாரா. இது அண்ணாத்த படத்தில் நடிக்கும் போதே பெரிய பிரச்சினையாக ஆனது.

ஏனென்றால் அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருப்பார் நயன்தாரா. ஆனால் டைட்டிலில் சூப்பர் ஸ்டாருக்கு மட்டும்தான் அந்த பட்டத்தை கொடுக்க முடியும் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கூறியிருந்தது. ஆனால் நயன்தாரா தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று போட வேண்டும் என்று மல்லுக்கட்டி செய்ய வைத்திருக்கிறார். அதனால் நயன்தாரா கூறுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை. அதில் உண்மை தன்மை இல்லை என்று வலைப்பேச்சு சேனலில் கூறி இருக்கிறார்கள்.