nayanthara

நயன்தாரா – தனுஷ் புகைப்படம் வெளியானதற்கு பின்னால் இருக்கும் சூட்சமம்… நிஜ நீலாம்பரியான லேடி சூப்பர் ஸ்டார்…

By admin on கார்த்திகை 22, 2024

Spread the love

நயன்தாரா தனுஷுக்கு இடையேயான மோதல் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதற்கு அடுத்ததாக நயன்தாராவும் தனுஷும் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் ஒரே வரிசையில் அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

   

என்னதான் தனுஷ் ஒதுங்கி ஒதுங்கி போனாலும் நயன்தாரா விடமாட்டார் என்பது போல இந்த திருமண விழாவில் படையப்பா நீலாம்பரி ஸ்டைலில் ஒரு வேலையை செய்திருக்கிறார். வலைப்பேச்சு சேனலில் அதைப் பற்றி பகிர்ந்து இருக்கிறார்கள்.

   

அவர்கள் கூறியது என்னவென்றால் தயாரிப்பாளர் திருமண நிகழ்ச்சியில் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தனுசுக்கும் நயன்தாராக்கும் வெவ்வேறு இடத்தில் சீட்டிங் அரேஞ்ச்மென்ட் செய்திருந்தார்களாம். ஆனால் நிகழ்ச்சிக்கு வந்த நயன்தாரா தனுஷ் இருக்கும் அதே வரிசையில் தான் அமர்வேன் எனக்காக சோபாவை போடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

 

அங்கு உட்கார்ந்து தனுசுக்கு நேராக காலுக்கு மேல் கால் போட்டு உட்காருவது போல அமர்ந்திருந்தார். இந்த புகைப்படம் வெளியானது நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் இந்த புகைப்படத்தை எடுத்தது நயன்தாரா டீம் தான். நிகழ்ச்சி நடத்தியவர்கள் பக்கத்தில் இருந்தோ அல்லது பிரஸ் மூலமாகவோ இந்த புகைப்படம் வெளிவரவில்லை. நயன்தாரா தரப்பில் உள்ளவர்கள் தான் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த புகைப்படத்தில் நயன்தாரா சற்று தெனவட்டாக அமர்ந்திருப்பது போல் தான் இருக்கும். தனுஷ் எப்போதும் போல எளிமை உருவமாக தான் அமர்ந்திருந்தார். அதனால் நயன்தாரா இப்படி பக்கா பிளான் செய்து படையப்பா நீலாம்பரி லெவலுக்கு இறங்கி முயற்சி செய்து இருக்கிறார் என்று பேசி வருகிறார்கள்.