முடிவுக்கு வந்ததா லேடி சூப்பர் ஸ்டாரின் சகாப்தம்..? கணவர் படத்திலிருந்து நயன்தாரா வெளியேற்றம்.. உண்மையில் நடந்தது என்ன..?

By Sumathi

Updated on:

நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறார். குறிப்பாக திருமணத்துக்கு பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. கனெக்ட், ஓ2 படங்களும் மக்கள் மத்தியில் பேசப்படவில்லை. அதே போல் ஜவான் படத்தில் நடித்த பிறகு இந்தியில் ஒரு ரவுண்டு வரலாம் என நயன்தாரா ஆசைப்பட்டார். அந்த நோக்கத்தில்தான், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். தாராளமான கவர்ச்சியும் காட்டியிருந்தார். ஆனால் படம் 1150 கோடி ரூபாய்க்கு வசூலித்தும் நயன்தாராவுக்கு, பாலிவுட்டில் வரவேற்பு கிடைக்கவில்லை.

   

இந்த சூழலில், தமிழில் அவர் நடித்த அன்னபூரணி படமும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இது அவரது 75 படம் என்ற நிலையில், படத்துக்காக ரொம்பவும் ஆர்வமுடன் நடித்துக் கொடுத்தும் படம், எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இதற்கிடையே படத்தில் இடம்பெற்ற சில சர்ச்சையான வசனங்கள், காட்சிகளும் விவகாரமாக உருவானது. ஒரு கட்டத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான படத்தை நீக்கும் நிலைக்கு போனது. இதையடுத்து நயன்தாரா, தானாக முன்வந்து மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். அவரது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி படத்திலும் நயன்தாரா முதலில் நடிப்பதாக இருந்தது. இப்போது அதில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். லேபிள் படம் மூலம் பேசப்பட்ட அருண் காமராஜ் இயக்கத்தில் நடிக்க ஒரு படம் முடிவானது. அந்த படத்தின் கதையும் பிடிக்கவில்லை என்று நயன்தாரா கூறியதால், கடுப்பான தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை ட்ராப் செய்து விட்டது.

அருண்காமராஜூக்கு கொடுத்திருந்த ஆபீஸ் ரூமையும் காலி பண்ணச் சொல்லிவிட்டது. இப்படி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நயன்தாராவுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பே இல்லாமல் வீட்டில் உட்காரும் நிலை ஏற்பட்டுள்ளது. இனி நயன்தாராவுக்கு சினிமாவில் எதிர்காலம் இல்லை என்ற பேச்சு, கோலிவுட்டில் அதிகரித்துள்ளது.

author avatar
Sumathi