லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் நயன்தாரா ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார். ஜவான் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் மற்றொரு ஹிந்தி படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
புகழ்பெற்ற ஹிந்தி டைரக்டரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி பெரிய பட்ஜெட்டில் பைஜூ பாவ்ரா என்ற பிரம்மாண்ட படத்தை எடுக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த படத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக அலியா பட் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சஞ்சய் லீலா பண்புசாலியை ஏற்கனவே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சந்தித்து பேசியுள்ளனர். ஆனாலும் நயன்தாரா இந்த படத்தில் நடிப்பது குறித்து இன்னும் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒருவேளை நயன்தாரா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடும். அடுத்த வருடம் தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிமுக ஆதரவளிப்பது குறித்து எடப்பாடி…
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…