Categories: சினிமா

யாஷ்-க்கு அக்காவாக நடிக்க டபுள் மடங்கு சம்பளம் கேட்கும் நடிகை நயன்தாரா.. இருந்தாலும் இம்புட்டு ஆசை ஆகாது..!

Spread the love

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வரும் இவர் தற்போது சற்று சறுக்கலை சந்தித்து இருக்கின்றார் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் தொடர்ந்து இவரின் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் திரைப்படத்தில் இருந்தாலே ஹிட்டுதான் என்று இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அதிலும் அன்னபூரணி திரைப்படம் தோல்வியை சந்தித்தது. கடைசியாக ஹிந்தியில் இவர் நடித்த ஜவான் திரைப்படம் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தொடர்ந்து மற்ற மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை நயன்தாரா. தற்போது டெஸ்ட் மட்டும் மண்ணாங்கட்டி என்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் இவருக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கின்றது. அதாவது கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்சிக் என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.  நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

அதாவது கரீனா கபூர் நடிக்க இருந்த ரோலில் நயன்தாரா நடிக்கிறாராம். கால்சீட் பிரச்சினை காரணமாக கரீனா கபூர் இந்த படத்திலிருந்து விலக நயன்தாரா இந்த திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கின்றார். படத்தின் கதையை கேட்டு சரி என்று கூறியிருக்கும் நடிகை நயன்தாரா இப்படத்தில் நடிப்பதற்கு 20 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளாராம்.

அதிலும் அக்காவுக்கும் தம்பிக்கு இடையேயான எமோஷனல் காட்சி இந்த திரைப்படத்தில் அதிகம் இருப்பதால் தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கூறியிருக்கிறாராம் நயன்தாரா.  இதுவரை 10 முதல் 11 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா ஒரே போடாக தனது சம்பளத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால் படக்குழுவினர் மிகவும் ஷாக்கில் இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்து இருக்கின்றார்.

Mahalakshmi

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

1 minute ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

13 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

26 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

26 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

31 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

41 minutes ago