தனுஷ் மற்றும் நயன்தாரா விவகாரம் தற்போது பெரிய அளவில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நயன்தாராவின் ஆவணப்படம் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அவருடைய வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை உள்ளடக்கியதாக இந்த ஆவணப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் நயன்தாராவுக்கும் தனுசுக்கும் இடையே நடக்கும் பிரச்சனை பற்றி வலைப்பேச்சு பிஸ்மி ஒரு தகவலை பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், நயன்தாராவின் அந்த ஆவணப்படம் நவம்பர் 18 ரிலீஸ் ஆக உள்ளது. அந்த டீசர் ட்ரைலர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் மக்களிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் அது ஏற்படுத்தவில்லை.
அது மட்டுமல்லாமல் நாளை வெளியாக கூடிய அந்த ஆவண படத்தை பற்றிய செய்தியும் பெரிதாக ரீச் ஆகவில்லை. இப்படியான நிலையில்தான் தன்னுடைய ஆவணப்படத்திற்கு ஒரு பப்ளிசிட்டியை தேடிக் கொள்வதற்காக நயன்தாரா தனுசுக்கு எதிராக அந்த பெரிய அறிக்கையை வெளியிட்டார் என பிஸ்மி கூறியுள்ளார். இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் அந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளையும் பாடலையும் பயன்படுத்துவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே தனுஷிடம் போராடிக் கொண்டிருக்கிறோம், அவர் NOC தரவில்லை என அந்த அறிக்கையில் நயன்தாரா குறிப்பிட்டு இருந்தார்.
இரண்டு வருடமாகவே இந்த பிரச்சனை நடக்கும் பட்சத்தில் ஆவணப்படம் வெளி ஆவதற்கு இரண்டு நாள் முன்பாக இதை பொதுவெளியில் நயன்தாரா ஷேர் செய்து ஏன் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும். அப்போ இதனுடைய பின்னணி ஒரு பக்கம் தனுஷை அசிங்கப்படுத்த வேண்டும் மற்றொரு பக்கம் அதையே தன்னுடைய ஆவணப்படத்திற்கான பப்ளிசிட்டியாக பயன்படுத்த வேண்டும் என்ற நயன்தாராவின் வியாபார நோக்கம் தான் இது என்று அவர் பேசியுள்ளார். மேலும் தனுசுக்கு நயன்தாராவின் மேல் என்ன கோபம் என்றால் நானும் ரௌடி தான் படத்தின் பட்ஜெட் வெறும் 4 கோடி தான்.
ஆனால் அந்த சமயத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா மீது காதல் வயப்பட்டதால் அவரை எப்படியாவது இம்ப்ரஸ் பண்ண வேண்டும் என்பதற்காக பல யுக்திகளை அந்த படத்தில் பயன்படுத்தி உள்ளார். இதனால் வெறும் நான்கு கோடி பட்ஜெட்டில் உருவாக இருந்த நானும் ரவுடிதான் படம் அப்போது 17 அரை கோடி பட்ஜெட்டில் எடுத்து முடித்துள்ளனர். இது தயாரிப்பாளர் தனுசுக்கு மிகப் பெரிய நஷ்டம். இதனாலையே தனுஷ் இவர்கள் மீது கோபத்தில் இருந்து உள்ளார்.
மற்றொரு பக்கம் நயன்தாராவுக்கு ஆதரவாக நடிகைகள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த நடிகைகள் அனைவருமே தனுசுக்கு ஜோடியாக நடித்தவர்கள் தான். ஆனால் அவர்கள் வேறு ஏதோ நிலைப்பாட்டிற்காக தான் தனுசுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். அது பாராட்ட வேண்டிய விஷயம் தான். ஏனென்றால் ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் அவர் செய்தது தப்பு தப்பு தான் என தைரியமாக குரல் கொடுத்து வருகிறார்கள். அதே சமயம் அவர்களின் நிலைப்பாட்டிற்கு வேறு ஏதாவது காரணம் இருந்தால் அதையும் வெளிப்படையாக கூற வேண்டும் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…
தற்போது 49 வயதாகும் லிஸி ஜோன்ஸ் என்பவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை டேவிட் டெரன்ஸ் பெத்திக்…
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…
அதிமுகவின் தற்போதைய பின்னடைவு மற்றும் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கடுமையாகச்…