CINEMA
பொதுவா இந்த நிகழ்ச்சிக்கும் போக மாட்டேன்.. ஆனா இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு காரணம் இதுதான்.. நயன்தாரா பேசிய வீடியோ வைரல்..!!
இயக்குனர் விஷ்ணுவர்தன் கடந்த 2003 ஆம் ஆண்டு குறும்பு என்ற படத்தை இயக்கி திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு 2005-ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும், 2006-ஆம் ஆண்டு பட்டியல், 2007-ஆம் ஆண்டு பில்லா ஆகிய படங்களை இயக்கினார். இந்நிலையில் விஷ்ணுவர்தன் நேசிப்பாயா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். நேசிப்பாயா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடு விழா நேற்று நடைபெற்றது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டார். படங்களில் ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல தான் இருப்பார்.
ஆனால் நேற்று நேசிப்பாயா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார். ஏனென்றால் விஷ்ணுவர்தன் நயன்தாராவின் நண்பர் ஆவார். எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா விஷ்ணுவர்தன் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தொடர்ந்து மேடையில் பேசிய நயன்தாரா கூறியதாவது, நான் பொதுவாக எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன். ஆனால் இந்த விழா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏனென்றால் இது என்னுடைய இயக்குனர் விஷ்ணுவின் படம். என் நெருங்கிய தோழி அணுவின் படம். இது கிட்டத்தட்ட ஒரு குடும்பம் போல தான். இது எனக்கு குடும்ப விழாவில் பங்கேற்பது போல தான். அதனால் தான் இந்த விழாவிற்கு வர முடியாது என நான் சொல்லவில்லை என கூறியுள்ளார்.