Connect with us

‘நிலா அது வானத்து மேலே’ பாடல்.. அடம் பிடித்த இளையராஜா.. பாடல் உருவானது குறித்து மனம் திறந்த ஜனகராஜ்..!

CINEMA

‘நிலா அது வானத்து மேலே’ பாடல்.. அடம் பிடித்த இளையராஜா.. பாடல் உருவானது குறித்து மனம் திறந்த ஜனகராஜ்..!

80து மற்றும் 90 கால கட்டங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்த ஜனகராஜ் அவர்கள். நிலா அது வானத்து மேலே என்ற பாடல் உருவான விதம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கின்றார். தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 1990 காலகட்டத்தில் எந்த கேரக்டர்கள் கொடுத்தாலும் அதனை தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் சிறப்பாக நடிப்பவர் ஜனகராஜ்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு 96 என்கின்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் ஜனகராஜ் பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு போனனர். இவர் சமீபத்தில் பேட்டியில் நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் நிலா அது வானத்து மேலே என்ற பாடல் குறித்து பேசி இருந்தார். நாயகன் இந்திய வரலாற்றையே புரட்டி போட்ட ஒரு திரைப்படம்.

   

மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில், பாலகுமாரன் வசனத்தில், இசைஞானி இளையராஜா இசையில் வெளியான இந்த திரைப்படம் தமிழகத்திலிருந்து மும்பை சென்று மிகப்பெரிய தாதாவாக மாறிய வரதராஜ் என்பவரின் வரலாற்றின் அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதில் பரிந்துரைக்கப்பட்டு மூன்று தேசிய விருதுகளை வென்றது.

 

நாயகன் படத்தின் பின்னணி இசையே படத்தை வேறு கோணத்தில் எடுத்து சென்றிருக்கும். ஒவ்வொரு இசையும் புல்லரிக்க வைக்கும் வகையில் இருந்திருக்கும். இந்த திரைப்படத்தில் கமலஹாசன் உடன் படம் முழுவதும் பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் ஜனகராஜ் நடித்திருப்பார். கமலஹாசன் சக்திவேலாக இருந்து வேலு நாயகராக மாறும்போது கமலுடன் உறுதுணையாக இருந்திருப்பார்.

இவருக்காக ஒரு பாடல் இப்படத்தில் எடுக்கப்பட்டது. அதுதான் நிலா அது வானத்து மேலே.. இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் இந்த பாடலுக்கு வரிகளை எழுதியவர் இளையராஜா தான். கடலில் படகு செல்லும் லொகேஷனும், ஜனகராஜனின் நடிப்பும், குயிலியின் மீனவர் பெண் நடனமும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் இருந்திருந்தது.

இப்பாடலில் முதலில் வரும் வரியான நிலா அது வானத்து மேலே வரிக்குப் பிறகு பலானது ஓடத்து மேலே என்ற வரியில் பலானது என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடையாது. சென்னை வட்டார வழக்கில் பலானது என்ற வார்த்தை அடிக்கடி குறிப்பிடுவதால் இந்த வார்த்தையை இளையராஜா பயன்படுத்தி இருந்தார். இதற்கு பதிலாக வேறு வார்த்தையை போட்டு பார்த்தார்கள்.

ஆனால் எதுவுமே இளையராஜாவுக்கு திருப்தியை கொடுக்காததால் பலானது ஓடத்து மேலே என்ற வரியை போட்டே ஆக வேண்டும் அடம்பிடித்து அந்த வரியை சேர்த்து இருந்தாராம் இளையராஜா. ஜனகராஜ் அவர்களுக்கு இந்த பாடல் பேரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. இந்த சுவாரசிய சம்பவத்தை அவர் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top