தமிழ் சினிமாவிற்கு 1994ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் நாட்டாமை. இந்த காலகட்டங்களில் வெளியான படங்களில் அதிக நாட்கள் தியேட்டரில் ஓடிய படமாகவும், அதிக வசூல் செய்த படமாகவும் இருந்தது.

#image_title
நாட்டாமை படத்தின் வெற்றியை பார்த்து அன்றைய முன்னணி நடிகர்களே மூக்கின்மேல் விரல் வைத்தனர். இத்திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் இன்றுவரை நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இன்று ஒளிபரப்பு செய்தால் கூட ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள்.
இத்திரைப்படத்தில் கவுண்டமணி, செந்திலின் அப்பா- மகன் நகைச்சுவையை நினைத்தாலே சிரிப்பை நம்மால் அடக்க முடியாது. ஒரு காட்சியில், கவுண்டமணிக்கு பெண் பார்க்கச் செல்லும் படத்தில் பெண் ஒருவர் நடித்திருப்பார். அந்த காட்சியில் மட்டுமே நடித்திருந்தாலும் பலருக்கும் இன்றும் நினைவிருக்கும்அவர் பெயர் கீர்த்தி நாயுடு.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட கீ்ர்த்தி படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கி ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார், ரோஜா- மீனா போன்ற நடிகைகளுக்கு தோழியாகவும் நடித்துள்ளார். தற்பொழுதும் இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கீர்த்தி நாயுடு. இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். தற்பொழுது இவர் தளபதி விஜயின் எனக்கொரு சிநேகிதி சினேகிதி என்ற ஹிட் பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோவானது இணையத்தில் வேற லெவலில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram