“காட்டிக்கொடுத்த மீடியா!” – ஈரானில் சிக்கிய வீரரை கொல்ல சதி நடந்ததா?… ரகசியத்தை உடைத்த ஊடகத்திற்கு ஆப்பு வைத்த டிரம்ப்…!

Spread the love

ஈரான் எல்லையில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பிய வீரரை மீட்கும் ரகசியத் தகவல்கள் கசிந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் கசிவு குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மீட்புப் பணி குறித்த நுணுக்கமான விவரங்கள் ஊடகங்கள் வாயிலாக ஈரானுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். முதல் வீரர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இரண்டாவது வீரர் ஈரானுக்குள்ளேயே பதுங்கியிருந்த ரகசியத்தை ஊடகங்கள் அம்பலப்படுத்தியதால், ஈரான் படைகள் உஷாரடைந்ததாகவும், இது மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான இந்த ரகசியத்தை கசியவிட்ட நபரை ஒரு ‘மனநோயாளி’ என்று கடுமையாக விமர்சித்துள்ள டிரம்ப், அந்த நபரைக் கண்டறிய அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனம், தங்களுக்குத் தகவல் வழங்கிய நபர் யார் என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும், ஆதாரத்தைக் கூறத் தவறினால் அந்தப் பத்திரிகையாளரும், தகவல் கசியக் காரணமான நபரும் சிறைத்தண்டனையைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை பொதுவெளியில் பகிர்வது மன்னிக்க முடியாத குற்றம் என்பதே டிரம்பின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.

இந்தத் தகவல் கசிவால் ஏற்பட்ட கடும் சவால்களையும் மீறி, ஈரானுக்குள் சிக்கியிருந்த அந்த வீரரை மீட்க அமெரிக்கா மிகப்பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. சுமார் 155 போர் விமானங்கள் இந்த மீட்புப் பணியில் அதிரடியாக இறக்கப்பட்டன. இதில் குண்டுவீச்சு விமானங்கள், அதிநவீன போர் விமானங்கள் மற்றும் நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் என ஒரு பெரும் படையே பயன்படுத்தப்பட்டது. எத்தகைய முட்டுக்கட்டைகள் வந்தாலும், தனது நாட்டு வீரரைப் பாதுகாப்பதே முதன்மையான நோக்கம் என்பதை அமெரிக்கா இந்த நடவடிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

என்னது இது..? பிளிங்கிட்டில் ஆர்டர் செய்த பொருளைப் பார்த்ததும் புத்தி மாறிய டெலிவரி பாய்.. பெண் வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!!

ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…

1 minute ago

பரிட்சை எழுத வந்த இடத்தில் இப்படியா..? கால்வாயின் மேல்தளம் உடைந்து.. 25 மாணவர்கள் உள்ளே விழுந்த சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…

4 minutes ago

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

13 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

20 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

25 minutes ago