71வது தேசிய திரைப்பட விருதுகள்… 2 விருதுகளை தட்டி தூக்கிய பார்க்கிங் படம்… ஜிவி பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது…!

Spread the love

இந்திய சினிமாவின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகளின் 71 வது சீசனுக்கான வெற்றியாளர்கள் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. 2023 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் இந்த விருதுகளுக்கு தகுதி பெற்றவை. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய திரைப்படத்துறைக்கு ஒரு வெற்றி ஆண்டாக அமைந்தது. பல திரைப்படங்கள் தொடர்ந்து தேசிய திரைப்பட விருதுகளை குவித்தன. 71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் படம் பிரிவில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் தேர்வாகியுள்ளது.

அதனைப் போலவே வாத்தி படத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சிறந்த இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல சிறந்த திரைக்கதை பிரிவில் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. பார்க்கிங் படத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கரனுக்கு சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர் பிரிவில் விருது கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய விருது பெற்றுள்ள பிரபலங்களுக்கு திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Nanthini

Recent Posts

“போலி ஆதார்… வாடகைக்கு தாத்தா… 80 லட்சத்தை அள்ளிய மோசடி கும்பல்!”… … வில்லங்க சான்று பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி

சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…

2 minutes ago

ஈரானை அதிரவைத்த மர்ம மனிதர் ‘M’ யார்?… 30 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை… ஒரே ஒரு விபத்து… உலகையே அதிரவைத்த பின்னணி…!

அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…

5 minutes ago

டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. சில மணி நேரங்களில் ஈரான் செய்த காரியம்…. நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல்… உலகையே உலுக்கும் போர் பதற்றம்….!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…

15 minutes ago

மேடையிலேயே கதறி அழுத ஜெனிலியா… கணவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கலங்கிப்போன ரசிகர்கள்…!

சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…

20 minutes ago

உதயநிதி கோட்டையில் அதிர்ச்சி… “புர்கா அணிந்து கள்ள ஓட்டா?” – திமுக மீது தவெக வேட்பாளர் வைத்த அதிரடி புகார்..!

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…

23 minutes ago

நிமிஷத்தில் மாறிய காட்சி… “ஈரான் காலி!” – டிரம்ப் வெளியிட்ட அதிரடி பதிவு… அடுத்த நொடியே பதறிப்போன உலக நாடுகள்…!

மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…

28 minutes ago